மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த்ராவ் சிக்கித்சலயா அரசு மருத்துவமனையில், NICU-வில் வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு வாரமே ஆன இரு பச்சிளம் குழந்தைகளில் ஒரு குழந்தையின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோளில் எலி கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மஹாராஜா யஷ்வந்த்ராவ் சிக்கித்சலயா அரசு மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளை வைக்கும் என்.ஐ.சி.யு-வில் எலி சுற்றித் திரியும் அதிர்ச்சி வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.